மனிதனோடு மறந்திருக்கும் உண்மைகள் !

Posted by Justin Jeevaprakash | | Posted On Friday, March 3, 2023 at 5:13 PM


இரகசியம் என்பது என்றுமே நிரந்தரம் இல்லாத ஒன்றாகக் காலத்தின்  பிரசவத்தில் அவ்வப்போது பிறக்கின்றது.  ஒவ்வொரு     இரகசியமும்    சரியான     நேரம், இடம்,  மற்றும்  சரியான  மனிதருக்காகக் காத்திருக்கிறது. அறிவியல் உலகிலும் இப்படித்தான்; சமய உலகிலும் இப்படித்தான். அகநிலை அறிவியல் பற்றியும், உள்ளார்ந்த மனித விஞ்ஞானம் பற்றியும் பல நாடுகளில் நடந்துள்ள ஆய்வுகளைப் பார்க்கும் போதும் மனம் திகைத்துதான் போகிறது. நம்மிடத்தில் ஒரு சாவி இருக்கிறது. அந்தச்  சாவியிலிருந்து  அதன்  கருவூலத்தைத் திறந்து காணலாம் என்பதையும் கற்பனை  செய்ய  வழியில்லை. செல்வம் இருப்பதற்கான அடையாலம் எதுவும் சாவியில் இல்லை. சாவியே ஒரு பூட்டாக மூடிக்கிடக்கிறது   என்கிறார் ஓஷோ. ஆம் அந்தச் சாவியை துண்டு துண்டாக உடைத்தாலும் அது உலோகம் என்று தெரியுமே தவிர, அதிலிருந்து வெளிப்படப் போகும் செல்வம் என்னவென்று அறிந்து கொள்ள முடியாது.  எந்த விதமான குறிப்பும் இல்லாத சாவி ஒன்றை, நெடுங்காலம்             வைத்திருப்பது        வெறும்          சுமையாகவே ஆகிவிடும்.
இந்த சுமையை  நம்முடையே    பலர்  
வைத்துக்            கொண்டுதான்       உலா        வந்து கொண்டிருக்கிறோம். 
இருந்தும்    அதை  தூக்கி     எறிந்துவிடும்    எண்ணம் நமக்கு ஏற்படவில்லை காரணம் ஒரு பூட்டை என்றாவது ஒரு நாள் அது திறக்கக்கூடும் என்ற நம்பிகை! இந்தத் தேடலின் கண்டுப்பிடிப்புதான் இன்றைய நம் உலகம். பல சாவிகலால் திறக்கப்பட்டு கட்டவிழ்க்கப்பட்ட ஒரு மாபெரும் சக்திதான் இன்றைய உலகம்  என்று கூறினால் அது சொல்லத்தகுந்தது. மனிதன் ஆதியிலிருந்து இன்று வரை தனது விடாமுயற்சியாலும் திருப்தியின்மையாலும் தனது தேடலின் முடிவாலும் நாளுக்கு நாள் அதிநவீன மாற்றங்களைக் கண்டுப்பிடித்து வருகிறான்.  இதற்கு காரணம் தான் வைத்திருந்த சாவிக்கு ஏற்ற பூட்டைக் கண்டுப்பிடித்ததால். சில சமயங்களில் தான் வைத்திருந்த சாவிக்கு ஏற்ற பூட்டை கண்டுப்பிடிக்காமல் போவதும் உண்டு. ஆனால் அது தொடர் முயற்சியாக ஆடுத்தவரின் தேடலுக்கு உட்பணிந்து போவதும் உண்டு. இதுவே பல கண்டுப்பிடிப்புகளின் பரினாமம் என்று கூறவே விரும்புகிறேன். எந்த அளவிற்கு   நாம் நம்முடைய  எண்ணத்தையும்  சொல்லையும் செயலையும் செயலாக்கத்திற்கு கொண்டு வருகிறோமோ  அந்த அளவிற்கு  நம்மால் வெற்றியடைய முடியும். முடியாது முடியாது என்பவனும் , அது இல்லை, இது இல்லை என்பவனும் மரக்கட்டைக்கு ஒப்பானவன் என்கிறார் ஒரு பிரஞ்ஜு அறிஞர். உலகில் உள்ள அனைத்தும் நம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும்   அமைந்துள்ளது. அது போல ஒரு மனிதனின் உயர்வும் தாழ்வும் அவனின் நம்ப்பிக்கையின் அடிப்படையிலும்  விடாமுயற்சி எனும் தொடர் செயலாலும் நடைப்பெறுகிறது.   அவற்றைப்  பயன்படுத்தி   வாழ்க்கையில் எது வேண்டுமோ அதை நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும்   செயல்பட்டு   நம்மிடம் இருக்கும் சாவிக்கான பூட்டைத் தேடிக் கண்டுப்பிடிப்போம்!  நன்றி.

Comments:

There are 0 comments for மனிதனோடு மறந்திருக்கும் உண்மைகள் !

Post a Comment