முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ' பாகேஸ்' (BAGES) செயல்திட்டம்.

Posted by Justin Jeevaprakash | | Posted On Friday, June 10, 2011 at 11:06 PM

     வணக்கம். கணேசர் தமிழ்ப்பள்ளியில்          முதலாம் ஆண்டு மாணவர்களுக்கென தேசிய மொழியில் எளிதில்  வாசிக்க இந்த 'பாகேஸ்'  எனும்  செயல் திட்டத்தை  
இவ்வாண்டின் ஆரம்பத்தில் துவங்கினேன். இதில் மாணவர்களுக்கு 6 நிலையிலான வாசிப்புப் புத்தகங்கள்(எளிமையிலிருந்து  கடினம்)   6  நிலையங்களாக  பிரித்து  வகுப்பறையைச் சுற்றி வைக்கப்பட்டது. மாணவர்கள் தங்களின் நிலையறிந்து தங்களுடைய நிலையங்களை வளம் வரும்படி ஓர் அமைப்பு முறையை உருவாக்கியதன் மூலம், அவர்கள்  எளிதில்  தங்களுக்கான  வாசிப்புப் புத்தகங்களை அடையாளங்கண்டு  வாசிக்கப் பழகினர்.
இது மாணவர்களின் வாசிப்புத்திறனை மேலோங்க செய்ததோடு, சுயக்கற்றலையும் உருவாக்கியதை எங்களால் உணர முடிந்தது. வாரத்தில் ஒரு நாள் இச்செயல்திட்டத்திற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகளும்   மாணவர்களின் அடைவுநிலையின்படி,   அடுத்த நிலையங்களுக்கு அவர்களை உயர்த்துவதற்கும் பிரத்தியோக வகுப்பொன்றும்                     சிறப்பாக  
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்டும் வருகிறது. இதில் இக்குழந்தைகள் மிகவும் ஆர்வத்தோடு இயங்கி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் மாணவர்கள் இதச்செயல்திட்டத்தில்   மொழிவிளையாட்டுகளில் ஈடுபடுவதைப் போலவே  
ஆர்வம் குன்றாமல்   இன்றளவிலும்  ஈடுபாடு  காட்டி  வருவதும்,  தேசிய மொழியில் கடந்தாண்டு முதலாம் ஆண்டு மாணவர்களை விட இவர்கள் சீக்கிரமே வாசிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதையும் எங்களால் இச்செயல் திட்டத்தின் மூலம் உணர முடிகிறது.
          தேசிய மொழியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எழுத்தறிமுகம் செய்யவும், அல்லது வாசிப்புத் திறனை மேலோங்கச் செய்யவும், கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை எளிமைபடுத்திக் கொள்ளவும் இத்திட்டம் எங்களுக்கு நன்கு உதவியது என்றே கூற வேண்டும்.இத்திட்டத்தை ஆசிரியர்கள் தங்களின் பள்ளியிலும் நடத்திப் பார்க்க விரும்பினால் என் மின் அஞ்சலுக்குத் தாராளமாகத்  தொடர்புக்கொள்ளலாம். நன்றி.

Comments:

There are 1 comments for முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ' பாகேஸ்' (BAGES) செயல்திட்டம்.

Post a Comment