கணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 1 (02.10.2011)

Posted by Justin Jeevaprakash | | Posted On Sunday, October 2, 2011 at 7:10 PM

         வணக்கம். நீண்ட காலமாக தமிழர், தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைத் தமிழ்ப்பள்ளி  மாணவர்கள் அறிந்து தங்களை ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் சிலேடித்துக் கொண்டே இருந்தது.  தற்போது      நம் மாணாக்கர்களிடம்       தமிழுணர்வு  நாளுக்கு நாள்      குறைந்து கொண்டே வருவதால் எனக்கு இவ்வெண்ணம் உதித்தது என்றே கூற வேண்டும். இதற்கு என்ன  செய்யலாம் என்று சிந்தித்த போதுதான், ' தமிழ் மொழி வாரம்' என்ற தலைப்பில் ஒரு வாரம்  முழுதும்  தமிழர்,    தமிழரின்     பண்பாடு,கலாச்சாரம்       போன்றவற்றை   யொட்டிய    நிகழ்வுகள்  அடக்கிய  ஒன்றை   நடத்திப்பார்க்கலாமே         என்ற ஒரு முடிவுக்கு வந்தேன். தமிழ் மொழிக் கழகச் சார்பில் பள்ளி ஆசிரியர்களோடு கலந்தாலோசித்து,  தமிழ்வேள் கோ. சாரங்கபாணியின் பெயரில் இவ்விழாவை இன்று ஆரம்பித்தோம்.
        நிகழ்வின் முதல் நாளான இன்று, பள்ளியில் கவிதை புனைதலும், கபடி போட்டியும் நடந்தேறியது. பள்ளி மாணவர்கள் இவ்விரண்டு போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
          முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு மாணவர்கள் கவிதை புனைதலில் கலந்து கொண்டு  சிறப்பித்தனர். மாணவர்கள்,  மாகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், போன்ற சான்றோர்களின் கவிதைகளை மிகவும் சிறப்பாக ஒப்புவித்தனர்  என்பது இங்கு  குறிப்பிடத்தக்கது.      அதுமட்டுமின்றி,  ஆசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக கவிதைகளைப் புனைய பெரிதும் பங்காற்றியுள்ளனர் என்பதனை , மாணவர்களின்                           கவிதை                ஒப்புதல்கள்     புலப்படுத்தியது.
            இப்போட்டியினைத்             தொடர்ந்து,
ஐந்தாம் மற்றும் ஆறாம்         ஆண்டு
மாணவர்களுக்கென கபடிப் போட்டி
நடைபெற்றது.  
இவ்விளையாட்டினை  மாணவர்கள்
ஏற்கனவே     விளையாடியிருந்தாலும், இது  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதனை மாணவர்கள் அறிந்து முறையே விளையாட வேண்டும் என்பதே எங்களின் முதல் நோக்கமாக இருந்தது. கபடி விளையாட்டின் தோற்றமும் அதன் வளர்ச்சியும்  ஆசிரியர்களால் மாணவர்களுக்கு முறையே தெளிவுப்படுத்தப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்கள் கொடுத்த விதிமுறைகளுக்கொப்ப விளையாடினர். காற்பந்து விளையாட்டின் மேலுள்ள மோகத்தைக் காட்டிலும் கபடி விளையாட்டின் மேல் அதிகமாகவே மாணவர்களுக்கு மோகம் எற்பட்டதை என்னால் உணர முடிந்தது. இவ்விரண்டு போட்டிகளுடன் கோ.சாரங்கபாணியின் வாரத்தின் முதல் நாள் ஒரு நிறைவை நாடியது. போட்டிகளில் வெர்றிப் பெற்ற மாணவர்களுக்கு, போட்டிகளின் இறுதி நாளன்று நடைபெறவிருக்கும், பரிசளிப்பு விழாவில்  வெற்றிக் கேடயங்கள் வழங்கப்படும்  என்பது இங்கு  குறிப்பிடத்தக்கதாகும்.

தொடரும்......
       

Comments:

There are 0 comments for கணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 1 (02.10.2011)

Post a Comment