கணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 2 (03.10.2011)

Posted by Justin Jeevaprakash | | Posted On Sunday, October 9, 2011 at 9:22 PM

         கோ.சாரங்கபாணியின் இரண்டாவது நாளான இன்று மாணவர்கள் கதைக்கூறும் போட்டியிலும் புதிர்போட்டியிலும் கலந்து கொண்டனர். ஓவ்வொரு ஆண்டிலும் மாணவர்கள் சுயமாகவும் ஆசிரியர் துணையுடனும் கதைகளை உருவாக்கிக் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கதைகளை முன் வைக்க வந்தாலும், பயத்தின் காரணமாக, குரல் நடுக்கத்துடன் கதைகளை ஒப்புவித்தது, பாராட்டக்கூடிய விடயம் என்றே கருதுகிறேன். இத்தகைய          பயம் மாணவர்களிடம் நாம் வளர்த்துவிட்டோமானால்         அது மாணவர்களிடம் பேச்சாற்றலை வளர்த்து 
விடாமல், அவர்களை தாழ்வுமனப்பான்மைக்குத் தள்ளிவிடுவதோடு, ஒரு சபைக்கு முன்னால் பேசும் ஆற்றலை இழந்தும் விடுவர் என்பது ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.

கதைக்கூறும் போட்டியில் கலந்து கொண்ட ஒரு சில மாணவர்கள்...


           கதைக்கூறும் போட்டிக்குப் பிறகு, மாணவர்களுக்குப் பதிர் போட்டி தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. மாணவர்கள் தமிழ், தமிழினம் தமிழர் பண்பாடு சம்மந்தமான கேள்விகள் அடங்கிய பதிர் போட்டியாக இது அமைந்தது. மாணவர்கள் தமிழ் அறிஞர்களையும் அவர்களின் போராட்டங்களையும் முன்பே அறிந்திருந்தது இப்புதிர்போட்டியில்  கலந்து கொள்ள அவர்களுக்கு ஆர்வமாக இருந்ததை அவர்களின் பங்கெடுப்பின் மூலம் அறிந்து கொண்டேன்
     மேலும் நமது பாரம்பரிய விளையாட்டுகளையும், தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதிலளித்தது மட்டுமல்லாமல், தமிழ் பால் ஆர்வம் அடைந்து என்னையும் என் சக ஆசிரியர்களையும் மகிழ்வித்தது
என்றே கூறவேண்டும்.   இதன் வழி  என்னுடைய நோக்கம் நிறைவேறிற்று என்பதை என்னால் உணர முடிந்தது.இந்த இரு நிகழ்வுகளுடன் இன்றைய இரண்டாம் நாள் ஒரு நிறைவை எட்டியது.

தொடரும்.....
  

Comments:

There are 0 comments for கணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 2 (03.10.2011)

Post a Comment