தமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...

Posted by Justin Jeevaprakash | | Posted On Tuesday, May 25, 2010 at 7:34 PM

         காப்பியம் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கிய வகையாகும். இதில் ஒரு கதை மையாமாகவும் பலவகை பாக்களால் பாடப்பெற்று பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கும். தமிழில் பல காப்பியங்கள் உள்ளன. கதைச் சிறப்பாலும், சமயக் கருத்தை உணர்த்துவதிலும் இவை சிறப்புற்று இருக்கிறது என்றே காப்பியங்களைக் கூற வேண்டும்.
         தமிழில் உள்ள காப்பியங்களை ஐம்பெருங் காப்பியங்கள் என்றும், ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் கூறுவர். ஐம்பெரும் காப்பியங்கள் என்றால், சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தாமணி,   வளையாபதி, 
குண்டலகேசி         போன்றவை      அடங்கும். ஐஞ்சிறு காப்பியங்கள்,என்றால், சூளாமணி, நீலகேசி, நாககுமார காவியம், யசோதர காவியம்,  உதயணகுமாரா காவியம் ஆகும்.
          தமிழில் உள்ள காப்பியங்களில் மிகப் பழமையானது சிலப்பதிகாரமாகும். கோவலன், கண்ணகி, மாதவி ஆகிய மூவர் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது சிலப்பதிகாரம். மேலும் சாதாரணக் குடிமகன் ஒருவனைத் தலைவனாக வைத்துப் பாடப்பெற்றதால், இதற்குப்  புரட்சி காப்பியம் என்றும் சிறப்புப் பெயர் உண்டு.
         சிலப்பதிகாரத்தோடு தொடர்புடையது மணிமேகளையாகும். இவை இரண்டும்  கதையாலும் காலத்தாலும் தொடர்புப்படுத்தப்பட்டிருப்பதால் இதனை இரட்டைக் காப்பியங்கள் என்றும் அழைப்பர். மணிமேகலையில் காப்பியத்தின் தலைவியாக மணிமேகளையும் இவள் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவளாக இருப்பாள். பௌத்த சமயத்தைப் பரப்புவதற்கே இக்காப்பியம் எழுதப்பட்டதாக சான்றுகள் கூறப்படுகின்றன.
        பிற்காலத்துல் சமண சமயத்தைப் பரப்புவதற்கே சீவகசிந்தாமணி என்ற காப்பியம் எழுந்தது. சைவ  சமயத்தின்  பெருமையை  விளக்கும்  வகையில்    பெரிய புராணம்,  கந்த புராணம், திருவிளையாடல் போன்ற 
காப்பியங்கள்  எழுந்தன.  வைணவ  சமயத்தின்  பெருமையைக்  கூறுவனவாகக்  கம்பராமாயணம்,  வில்லிபாரதம் போன்ற காப்பியங்கள் எழுந்திருப்பதாக சான்றுகள் பறைசாற்றுகின்றன.

கணேசர் தமிழ்ப்பள்ளியின் 'வெற்றியின் விலாசம் விடாது வாசித்தல்' (4வி)

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, May 20, 2010 at 6:48 PM

வணக்கம். உலகில் மூத்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இணையத்தின் வழியாகவும்   உலகத்தமிழர்கள் கருத்துப்    பரிமாற்றம்  செய்து      கொள்வதற்கும்  ஏதுவாகத்   தமிழ் மொழி  அமைந்துள்ளது.     இத்தகைய சிறப்பு  வாய்ந்த                  தமிழ்  மொழியில்      
கற்றல்       கற்பித்தல்  நடவடிக்கை  தமிழ்  நாடு, மலேசியா, சிரிலங்கா,
சிங்கப்பூர், தென் ஆபிரிக்கா, மொரிசியஸ், தாய்லாந்து, கம்போடியா என இன்னும் பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஆகவே, தமிழ்மொழி போதிக்கும் ஆசிரியர்கள் பலதரப்பட்ட அணுகுமுறைகளுடன் போதனா முறையைப் புதுமைப்படுத்திக் கொள்வது சிறப்பாகும்.                                   
 நம்முடைய போதனா முறையில்  அண்மைய காலமாகவே பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றதை நாம் அறிவோம்.அந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த     நோக்கத்தில்  ஏற்பாடு  செய்யப்பட்டதே இந்த 'வெற்றியின் விலாசம் விடாது வாசித்தல்' (4வி)  எனும் காரியத் திட்டமாகும். கற்றல் கற்பிதல்         கூறுகளில்  வாசிப்புத்  திறன்  மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அத்தகையத்  திறனை  மாணவர்கள் அடைய ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது. ஆகவே, கணேசர் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.யௌவணாராணி அவர்களின் ஊக்கத்துடன் மாணவர்களின் வாசிப்புத் திறனின் மேம்பாட்டிற்காகவே இந்த வாசிப்புத் திட்டத்தை செயலாக்கத்திற்குக் கொண்டு வந்தேன்.
 .
                                                                                     
இந்தத் திட்டம் பள்ளி அளவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பள்ளியின் தலைமையாசிரியரால் துவக்கப்பட்டது. மாணவர்கள் குழு வடிவில் பிரிக்கப்பட்டுத் தரத்திற்கேற்றவாறு வாசிப்பு அட்டைகளைப் பெற்றுக் கொண்டனர்.
கொடுக்கப்படுகின்ற வாசிப்பு அட்டைகளை ஓய்வு நேரத்திற்குப் பிறகு வாசிப்பதுடன் வாரத்தின் இறுதி நாளில் பிற குழு தலைவர்கள் , தாயாரிக்கப்பட்டிருக்கும்  புள்ளி  விபர அட்டையில்  சம்மந்தப்பட்ட  மாணவரின் நிலையை வாசிக்கக் கேட்டு அவர்கள் பெறுகின்ற புள்ளிகளைக் குறிப்பெடுப்பர். இப்படி ஒவ்வொரு  வாரமும்  புள்ளிகள் சேர்க்கப்பட்டு மாணவர்கள் வாரம் ஒரு வாசிப்பு அட்டையைப் பிழையின்றி வாசிக்க முற்பட்டு,. மாத இறுதியில்  வெற்றிப்பெற்றக்     குழுவிற்குப்  நொருவங்கள் (hamper)           பரிசாக                         வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை வாங்குவதற்கான செலவீனங்களைப் பள்ளியின் தலைமையாசிரியரும், ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பொறுப்பேற்று நடத்தி வருகின்றனர் என்றே கூற வேண்டும். அதுமட்டுமின்றி இக்காரியத் திட்டம்  'மாநில புனை வாழ ஆசிரியர்'(Guru Inovatif)   எனும் ஆய்வுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி.

முனைவர் மு.இளங்கோவனின் உரை

Posted by Justin Jeevaprakash | | Posted On at 5:15 PM

வணக்கம்.மலேசியாவின் புகழ்பெற்ற நகரான சுங்கைப்பட்டாணியில் இன்று 20.05.2010 மாலை 5.30 மணிக்குத் "தமிழக நாட்டுப்புறப்பாடல்கள்" என்ற தலைப்பில் ஐயா அவர்கள் உரையாற்றுகிறார்.
இடம்: M.G.G.K மண்டபம்(ஜெயா புத்தக நிலையம்
காந்தி மண்டப முன்புறக்கடை வரிசையில் மேல்மாடி,
சாலான் செகெராட்,சுங்கைப்பட்டாணி.

நேரம்: மாலை 5-30. மணி
ஏற்பாடு: நவீன இலக்கியச் சிந்தனைக்களம்


இதனைத் தொடர்ந்து நாளை பிற்பகல் மணி 1.30 – பாரிட் புந்தார், தமிழியல் நடுவத்தில் “தமிழ் வளர்ச்சிப் பணியில் அயலகத் தமிழர்கள்” எனும் தலைப்பில் சொற்பொழிவு. தமிழியல் ஆய்வுக் களம், தமிழ் வாழ்வியல் இயக்கம் ஆகிய அமைப்புகள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.  நன்றி.
தமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்

Posted by Justin Jeevaprakash | | Posted On Tuesday, May 18, 2010 at 6:21 PM

வாழ்க நிரந்தரம் வாழ்க      தமிழ்மொழி வாழிய வாழியவே

வானம் அளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே

ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைகொண்டு வாழியவே

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும்  வாழியவே                                         
                                                                               - மாகவி சுப்பிரமணிய பாரதியார் -
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே

தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க மலைநாடே

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே


பாடல் விளக்கம்:

1. தமிழ்மொழி காலமெல்லாம் நிலைபெற்று வாழ்க.

2.எல்லையில்லாது விரிந்துகிடக்கும் வான்வெளியில் இருக்கும்   அனைத்தையும் அளந்து அறியவைக்கும் வளமிக்க தமிழ்மொழி வாழ்க.

3. ஏழு கடல்களால் சூழப்பட்டுள்ள இந்த உலகம் எங்கிலும் எல்லாரும் மனம் விரும்பி மகிழ்ந்து பாராட்டும் பழியில்லாத புகழ்படைத்த தமிழ்மொழி வாழ்க.

4. தமிழர்களாகிய எங்களுக்குப் பரம்பரைச் சொத்தாக வந்துகொண்டுள்ள தமிழ்மொழி எந்தக் காலத்தின் புதுமைக்கும் புதுமையாக நிலைத்து வாழ்க.

5. உலகத்துக்கும் உலகமக்களுக்கும் ஏற்பட்டுள்ள துன்பம்தரும் நிலைமைகள் யாவும் நீங்குவதற்குத் தமிழ் அறிவும் ஆற்றலும் உறவும் உயர்ந்து விளங்குக.

6. மக்களின் நன்முயற்சிகளுக்கும் நல்லுறவுக்கும் நல்வாழ்வுக்கும் இடைஞ்சல் செய்யும் இடையூறுகள் எல்லாம் நீங்கி இந்த மலேசியத் திருநாடு வாழ்க.

7. தன்னை நாடிவந்த அனைவரையும் சீரும் சிறப்புமாக வாழவைக்கும் உள்ளாற்றல் நிறைந்து விளங்குகின்ற தமிழ்மொழி வாழ்க.

8. எல்லையில்லாததாய் விரிவடைந்துகொண்டுள்ள வான்பரப்பில் ஆவது அனைத்தையும் மக்கள் அனைவருமே அறிந்து புதிய புதிய வளர்ச்சிகள் பெறுவதற்கு வழிகாட்டும் தமிழ்மொழி வாழ்க.

வணக்கம்.  அன்பர்களே  தமிழ் நன்றாக, நலமாக இருந்தால் தமிழ்ப்பள்ளிகளில் தோற்றம் கண்டிப்பாக  மாறும். மொழி அறிவு உள்ளவர்களால் மட்டும் ஒரு சமூகம் பயனடைந்து விடாது. மொழிமானமும் மொழிப்பற்றுதலும் மிகவும் அவசியம் என்பதை நினைவுக்கூர்ந்து ஒரு சேர்ந்து சிந்தித்துச் செயல்படுவோம்.
நன்றி.

கணேசர் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் தினக்கொண்டாட்டம்..

Posted by Justin Jeevaprakash | | Posted On at 4:32 PM

வணக்கம். ஆசிரியர் தினக்கொண்டாட்டம் கணேசர் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்கள்  மிகவும் மகிழ்ச்சியுடன் அந்நாளைக் கொண்டாடினர். ஆசிரியர்களின் சேவைகளை நினைவுக்கூர்ந்து மாணவர்கள் சிலர் சுயமாக கவிதை இயற்றி ஒப்புவித்தது ஆசிரியர்களைப் பிரமிக்க வைத்தது. அதுமட்டுமின்றி  அனைத்து  
மாணவர்களும் வகுப்புவாரியாக
ஆசிரியர்களுக்கென விருந்து ஏற்பாடு செய்து ஆசிரியர்களுக்குத் தங்களின்  அன்பை வெளிப்படுத்தினர். மேலும்,
மாணவர்கள் உற்சாகத்துடன்         புதிர் போட்டிகளிலும் விளையாட்டுகளிலும் கலந்துகொண்டு மகிழ்வுற்றனர். இந்த ஆசிரியர் தினத்தில் மாணவர்கள்    மட்டுமின்றி அனைவருமே தங்களின் ஆசிரியர்களை       நினைவுக்கூர்வர்; ஒரு வினாடியாவது தனக்குப் போதித்த
ஆசிரியரின் சேவையை நினைத்து ஆனந்தம் அடைவர். இதுவே,
இறைவன் ஆசிரியர்களுக்குக் கொடுத்த ஒரு வரம் என்றே நான் கருதுகிறேன். நன்றி.

நாட்டினத்தை உருவாக்குபவர் ஆசிரியர்

Posted by Justin Jeevaprakash | | Posted On Sunday, May 16, 2010 at 7:14 PM


வணக்கம்.       இன்று மலேசிய மண்ணில் ஆசிரியர் தினம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆசிரியர்களின் சேவைகளை நினைவுக்கூறும் வகையில் எல்லா பள்ளிகளிலும் ஆசிரியர் தினம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும். 'நாட்டினத்தை உருவாக்குபவர் ஆசிரியர்' என்பதை இவ்வாண்டின் கருப்பொருளாக கல்வியமைச்சு வரையறுத்திருப்பதுப் பாராட்டக்கூடியது. (Guru Pembina Bangsa Negara) ஆகவே, அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது ஆசிரியர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

நான் படித்த புத்தகம். ஒரு கண்ணோட்டம்...

Posted by Justin Jeevaprakash | | Posted On Saturday, May 15, 2010 at 7:08 PM

வணக்கம்.  விஞ்ஞான வளர்ச்சியில் பல மாற்றங்கள் நாளுக்கு நாள் ஏற்பட்டு வந்தாலும் மனிதனானவன் தனது மெய்ஞான வளர்ச்சியில் தன்னை அறியாமல் பல உலக மாயைகளுக்குச் சிக்கி சீர்குலைந்து கொண்டிருக்கிறான் என்பது பலர் கண்டறிந்த மெய்ஞான உண்மையாகும். ஆகவே, மெய்ஞான வளர்ச்சியைப்பற்றி நான் அவ்வப்போது ஒரு சில நூல்களைப் புரட்டுவதுண்டு. அவ்வகையில் அன்மையில் நான் படித்து முடித்த ஒரு புத்தகம்தான் பெரியவர் அருளானந்த அடியேன் என்பவரால் இயற்றப்பட்ட 'இறைவனை அடையும் சித்தர் அனுபவ விளக்கம்'
எனும் நூலாகும். இந்நூல் மனித வாழ்க்கையின் ஆன்மீக இரகசியங்களை மிகத்தெளிவாக எடுத்துரைக்கின்றது என்றால் அது மிகையாகாது. இப்புத்தகத்தின் மையம் தன்னை அறிந்து அவற்றுடன் ஒன்றாவதே தன்னை அறியும் பெருநிலையாகும் எனும் இரகசியம்தான். இப்புத்தகத்தை வாசிக்க வாசிக்க எனக்குள் இருந்த பல இருட்டு அறைகள் ஒளிப்பெற்றன. எனது பார்வையில் இப்பெரியவர் இயற்றிய இப்புத்தகம் இந்து தர்ம அடிப்படையில் இருந்தாலும் மதம், இனம் எனும் பேதமில்லாத மனித வாழ்க்கையின் இரகசியங்களை படம் பிடித்துக்காட்டுகின்ற ஒரு பொக்கிஷம் என்றே கூறத்தோண்றுகிறது. (இப்புத்தகத்தைப் படித்து பயன் பெற விரும்புவோர் (http://www.sageagatthiyar.com/) எனும் இணயத்தளத்தை நாடிப் பெற்றுக்கொள்ளலாம். நன்றி

எனது பள்ளி...

Posted by Justin Jeevaprakash | | Posted On at 5:18 PM

வணக்கம். இதுவே கணேசர் தமிழ்ப்பள்ளியாகும்.
இப்பள்ளிக் கெடா மாநிலத்தில், கூலிம் மாவட்டத்தின் கீழ் செர்டாங் எனும் ஒரு வட்டாரத்தில் அமைந்துள்ளது.
சுமார் 118 மாணவர்களும் என்னுடன் சேர்த்து 13 ஆசிரியர்களும் இப்பள்ளியில் பணிபுரிகின்றனர்.
திருமதி.யௌவணாராணி அவர்களே இப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆவார். பள்ளியின் அமைப்புப் பார்ப்பதற்கு எழில் மிகுந்து காணப்படுவதன் காரணம் பல நன்நெஞ்சங்கள் எங்களுடன் சேர்ந்து பள்ளிக்காகப் பாடுபடுகின்றனர் என்றால் அது சொல்லத்தகுந்தது. நன்றி.

முதல் துளி...

Posted by Justin Jeevaprakash | | Posted On at 4:41 PM

தமிழே உயிரே வணக்கம்...
தாய்ப்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்...
தாய் வாழ்க!
தமிழ்த்தாய் வாழ்க!
என்னை வாழ வைக்கின்ற இயற்கைத் தாய் வாழ்க!

வணக்கம். தமிழ் இனியனின் வளைப்பதிவின் மூலம் பல தமிழ் நெஞ்சங்களைச் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இவ்வளைப்பதிவின் மூலம் மொழி, இனம், தமிழ்ப்பள்ளி சம்மந்தப்பட்ட விடயங்களை உங்களிடம் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.