கணேசர் தமிழ்ப்பள்ளியின் 'வெற்றியின் விலாசம் விடாது வாசித்தல்' (4வி)

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, May 20, 2010 at 6:48 PM

வணக்கம். உலகில் மூத்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இணையத்தின் வழியாகவும்   உலகத்தமிழர்கள் கருத்துப்    பரிமாற்றம்  செய்து      கொள்வதற்கும்  ஏதுவாகத்   தமிழ் மொழி  அமைந்துள்ளது.     இத்தகைய சிறப்பு  வாய்ந்த                  தமிழ்  மொழியில்      
கற்றல்       கற்பித்தல்  நடவடிக்கை  தமிழ்  நாடு, மலேசியா, சிரிலங்கா,
சிங்கப்பூர், தென் ஆபிரிக்கா, மொரிசியஸ், தாய்லாந்து, கம்போடியா என இன்னும் பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஆகவே, தமிழ்மொழி போதிக்கும் ஆசிரியர்கள் பலதரப்பட்ட அணுகுமுறைகளுடன் போதனா முறையைப் புதுமைப்படுத்திக் கொள்வது சிறப்பாகும்.                                   
 நம்முடைய போதனா முறையில்  அண்மைய காலமாகவே பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றதை நாம் அறிவோம்.அந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு ஆசிரியருக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். இந்த     நோக்கத்தில்  ஏற்பாடு  செய்யப்பட்டதே இந்த 'வெற்றியின் விலாசம் விடாது வாசித்தல்' (4வி)  எனும் காரியத் திட்டமாகும். கற்றல் கற்பிதல்         கூறுகளில்  வாசிப்புத்  திறன்  மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அத்தகையத்  திறனை  மாணவர்கள் அடைய ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது. ஆகவே, கணேசர் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.யௌவணாராணி அவர்களின் ஊக்கத்துடன் மாணவர்களின் வாசிப்புத் திறனின் மேம்பாட்டிற்காகவே இந்த வாசிப்புத் திட்டத்தை செயலாக்கத்திற்குக் கொண்டு வந்தேன்.
 .
                                                                                     
இந்தத் திட்டம் பள்ளி அளவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பள்ளியின் தலைமையாசிரியரால் துவக்கப்பட்டது. மாணவர்கள் குழு வடிவில் பிரிக்கப்பட்டுத் தரத்திற்கேற்றவாறு வாசிப்பு அட்டைகளைப் பெற்றுக் கொண்டனர்.
கொடுக்கப்படுகின்ற வாசிப்பு அட்டைகளை ஓய்வு நேரத்திற்குப் பிறகு வாசிப்பதுடன் வாரத்தின் இறுதி நாளில் பிற குழு தலைவர்கள் , தாயாரிக்கப்பட்டிருக்கும்  புள்ளி  விபர அட்டையில்  சம்மந்தப்பட்ட  மாணவரின் நிலையை வாசிக்கக் கேட்டு அவர்கள் பெறுகின்ற புள்ளிகளைக் குறிப்பெடுப்பர். இப்படி ஒவ்வொரு  வாரமும்  புள்ளிகள் சேர்க்கப்பட்டு மாணவர்கள் வாரம் ஒரு வாசிப்பு அட்டையைப் பிழையின்றி வாசிக்க முற்பட்டு,. மாத இறுதியில்  வெற்றிப்பெற்றக்     குழுவிற்குப்  நொருவங்கள் (hamper)           பரிசாக                         வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை வாங்குவதற்கான செலவீனங்களைப் பள்ளியின் தலைமையாசிரியரும், ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பொறுப்பேற்று நடத்தி வருகின்றனர் என்றே கூற வேண்டும். அதுமட்டுமின்றி இக்காரியத் திட்டம்  'மாநில புனை வாழ ஆசிரியர்'(Guru Inovatif)   எனும் ஆய்வுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி.

Comments:

There are 6 comments for கணேசர் தமிழ்ப்பள்ளியின் 'வெற்றியின் விலாசம் விடாது வாசித்தல்' (4வி)

Post a Comment