தமிழவேள் கோ.சாரங்கபாணி வாரம் - நாள் 3 (04-10-2012)

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, May 31, 2012 at 10:30 AM

      தொடர்ந்து, மூன்றாவது நாளான இன்று, மாணவர்கள் தங்களை அதிகமாகவே ஆர்வப்படுத்திக்கொண்டிருந்தது மிகவும் மகிழ்ச்சியை எனக்குத் தந்தது.இன்றைய தினத்தில் மாணவர்களுக்கு மத்தியில் பட்டிமன்றம் நடத்தினேன். இப்பட்டிமண்றத்தை ஆசிரியை திருமதி அல்லியும் ஆசிரியை திருமதி சரோஜா தேவியும்எனக்கு சிறப்பாக      நடத்திக் 
கொடுத்தனர். இதில் நாங்காம் ஆண்டு, ஐந்தாம் ஆண்டு, மற்றும் ஆறாம் ஆண்டு  மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் முப்பிரிவுகளாகப் வகுப்பிற் கேற்றவாறு பிரிக்கப்பட்டனர்.     இப்போட்டிகளில் மாணவர்கள் தலைப்பிற்கேற்ப கருத்துகளை திரட்டி வந்து பேசியது மிகவும் சுவாரிசியமாக இருந்தது. இதனை தொடர்ந்து இன்று மாணவர்கள்  கோலமிடும் போட்டியிலும் கலந்து கொண்டனர்.
               இப்போட்டியில் அனைத்து வகுப்பு மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.  நம் இனத்தின் பாரம்பரியயத்தில் ஒன்றான கோலமிடுதல், நம் இனத்தரிடம் குறைந்தே வருவது, நம் பாரம்பரியத்தின் அழிவை நோக்கிவிடுமமென்ற அச்சத்தில் இதையும் ஒரு போட்டியாக நிகழ்த்த வேண்டும் என்ற எனது தீர்மானத்தில் ஆசிரியர்கள் அனைவரும் உடன்பட்டனர். ஐந்து பேர் ஒரு குழுவாக ஒன்றாம் ஆண்டு வரை ஆறாமாண்டு வரையில் மாணவர்களுக்கு இடங்கள் தயார் செய்து கொடுக்கப்பட்டது.  மாணவர்கள் தாங்கள் தயார் செய்து வைத்திருந்த கோலங்களை குழுமுறையில் வரைந்து காட்டினர். அனுபவமே இல்லாத பல மாணவர்கள் முதல் முறையாகக் கோலம் வரைந்தாலும் மிகவும் அழகாகவே வரைந்தனர்.