அந்தப் பஸ் பயணம்...

Posted by Justin Jeevaprakash | | Posted On Monday, August 23, 2010 at 10:46 PM

.
அன்று....
மெலிந்து..
நளிந்த இரவு
பயணம்...
இன்று மீண்டும்
என்னைத்  துவைத்தது...
அந்தப் பஸ்
பிரயாணத்தில்...

மீண்டும்
அடர்த்தியானது...
உதிர்ந்துபோன
என் நினைவுகள்
அன்றைய எந்தன்
மயிரிலைகள்
போல்...
தொலைந்து
போன
நண்பனின் விலாசத்தை
இன்று மீண்டும்
தேடித் தந்தது
என் மனச்
சாலைகள்..

கைப்பிடித்து
நடந்தோம்
முதலாம்
ஆண்டில்...
சிறகடித்துப்
பறந்தோம்
முதல்
படிவத்தில்...


கண்டும்
காணாததாய்
கடந்தது
நம்மையும்
பல நொடிகள்...

ஆனால்,

உன்னை
விட்டுப்போக
விடைகொடுத்தது
எனக்கு
அந்தக்
கல்லூரி பயணம்...

பிரிவு
நட்புக்கு
நிரந்தரமில்லை...
இயற்கைக்கது
பந்தமில்லை
என்றாய்....!

ஆனால்
நீயோ இயற்கைக்கு
சொந்தமானாயே....!

இதே பஸ்
பயணம்.
உன்னைக்
காலனுக்காக
அதிகாலையிலே
பசியாறியதோ...

உன்னை
விபத்துக்கு
இரையாக்கி
என்னைக்
கண்ணீருக்கு
சுவையாக்கி
விட்டாயே...!


.

Comments:

There are 1 comments for அந்தப் பஸ் பயணம்...

Post a Comment