குமரிக்கண்டம் ஓர் ஆய்வு....! (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது!)
Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, October 13, 2022 at 11:30 PM
குமரிக்கண்டம்! நாம் அடிக்கடி பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. குமரிக்கண்டம் பற்றி நம்மால் எதுவும் இன்றளவிலும் திட்டவட்டமாகக் கூறவியலவில்லை.ஆனால், இதனையொட்டி சில உண்மைகளை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும். குமரிக்கண்டமே தமிழனின் வரலாற்றின் ஆரம்பம் என்றும் கூறலாம். கடல்கோள்களால் குமிரிக்கண்டம் அழிவை எதிர் நோக்கியுள்ளது என்று அறிஞர்களும் கூறுகின்றனர். இவ்வழிவு கட்டம் கட்டமாக நிகழ்ந்திருப்பதாக நிலநூல் வல்லார்கள் தங்களது ஆராய்ச்சியில் நிரூபித்தும் வருகின்றனர். இதனையொட்டி 'ஸ்காட் எலியட்' (W.Scott Elliot) என்பவரின் கருத்தினை சிந்திக்கவே வேண்டும். இவர் பதினாறாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் முதல் கடல் பெருக்கு ஏற்பட்டதாகவும், மூன்றாவது கடல் பெருக்கு இருநூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாகவும், நான்காவது கடல் பெருக்கு எண்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிவை ஏற்படுத்தியதாகவும், ஐந்தாவது கடல் பெருக்கு கி.மு 9564இல் ஏற்பட்டதாகவும் தனது ஆராய்ச்சியில் குறிப்பிடுகின்றார். இக்கூற்றை ஒப்பீடு செய்து பார்க்கும் போது அட்லாண்டிக் கடல் பகுதியில் முன்பு ஒரு பூகம்பம் ஏற்பட்டு 'பொசிடோனியஸ்' எனும் தீவு கி.மு 9564இல்அழிந்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இதுவே முத்தமிழ் செல்வனின் தமிழக வரலாற்றிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குமரிக்கண்டம் குமரி முதல் ஆஸ்திரேலியா வரை பரந்து கிடந்ததாக கருதப் படுகிறது.இன்றைய இலங்கையும் உள்ளடக்கி 49 மாநிலங்கள் இருந்தனவாம். அதில்,வடமதுரை என்பதுதான் இதன் முதல் தலைநகர்.இங்குதான் முதல் சங்கம் இருந்தது.இங்குதான் அகத்தியர் தனது அகத்தியம் எனும் நூலை இயற்றினார்.இந்த சங்கம் என்ற சொல் குறிப்பிடுவது தமிழ்ச் சபையைக் குறிப்பிடலாம்.அல்லது இன்று united states of america 51 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி அமைப்பாக இருப்பது போல ஒரு Federation of 49 states ஆகவும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.அதன் பொது மொழியாக தமிழ் இருந்திருக்கலாம்.
முதல் சங்கம் கடல் ஊழினால் அழிந்தது.அதை ஆண்ட பாண்டியர்கள் வடக்கே நகர்ந்து கபாடபுரம் வந்தார்கள்.கொஞ்சகாலத்தில் சிலப்பதிகாரம் சொல்வது போல மறுபடி கொடுங்கடல் கொள்ள கடலே வேண்டாம் சாமி என்று இன்றைய மதுரையைத் தேடிப் பிடித்தார்கள்.அகத்தியர் இன்னும் நகர்ந்து கடல் கோளோ பூமி அதிர்வோ வராத இடம் என்று தேடி இன்றைய பொதிகை மலை வந்து சேர்ந்திருக்கலாம் .இங்கு தென்காசி அருகே உள்ள தோரணவாயில் மலையில் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார் என்றும் சான்றுகள் பகரப்படுகின்றன. அது ஒருவேளை புவியியல் ஆராய்ச்சிக் கூடமாகவும் இருக்கலாம்.( நன்றி: அரவை அரன்.)

தமிழனும் குமரிக்கண்டமும்: காணொளியைக் காண்க
மேலும், குமரிக்கண்டம் ஒரு மிகப்பழமையான நிலப்பரப்பு. அங்கு தமிழன் தோன்றினான். அவனே உலகின் முதல் மனிதன். அவனே உலகின் அனைத்துப் பண்பாடுகளுக்கும் முன்னோடியான பண்பாட்டை உருவாக்கினான். தமிழிலிருந்தே அனைத்து மொழிகளும் தோன்றின. இவற்றையெல்லாம் பின்னாள்களில் வந்த ஆரியச் சதிகாரர்கள் மறைத்துவிட்டார்கள் என்றும்
தேவநேயப் பாவாணர் முதல் அப்பாதுரைவரை முன்வைக்கும் சித்திரம் இதுதான். இதற்கும் சான்றாகக் குரங்கிலிருந்து பிறந்தவன்தான் மனிதன் என்றும் இவ்வுலகில் தோன்றிய முதல் குரங்கு மனிதனே பழந்தமிழ் நாட்டனாகத்தான் இருக்க முடியும் என்பதோடு விஞ்ஞானிகள், நில நடுக்கோடு எப்பகுதியில் செல்கிறதோ, அப்பகுதியிலே, ஆதி கரு உற்பத்தியாக முடியும் எனவும் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி, சீனிவாச ஐயங்கரும், 'பன்னெடுங் காலத்திற்கு முன் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்காக் கண்டங்களை உள்ளிட்டு, நில நடுக்கோட்டுப் பகுதியில் நிலவிய லெமுரியா விலங்கியது. இப்பகுதியே, மக்களின் பிறப்பிடமாக இருக்கலாம். தென்னிந்தியாவில் தோன்றி வாழ்ந்த பழங்குடி மக்களின் சந்ததிமார்களே திராவிடர்கள்.' எனக் கூறுவதும் இங்கு சான்றாகிறது.(நன்றி: முத்தமிழ் செல்வன்)

தொடர்ந்து, ஆதிமனிதன் மூதாதைகளுக்கு ஆஸ்திரேலா பிதகஸ்(குரங்கு மனிதன்) பிதகாந்தரப்பாஸ் (மனிதனின் மூதாதை). ஹோமா சாப்பியன் (ஆதிமனிதன்) என்றும் விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்கின்றனர். இந்துமாக் ஓரத்தில் இருக்கும் ஆப்பிரிக்காவிலும், ஜாவாவிலும் மனிதனின் மூதாதையர்கள் வாழ்ந்தனர் என்பதும் தெளிவாகிறது. இதற்கான சான்று (Burns Edward Mc And Philip Lee Ralph, World Civilization: From Ancient to Contemporary, Vol 1 ) ல் உள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களிலும், குமரிக்கண்டத்தின் சான்றுகள் பல காணவே படுகின்றன. இவற்றையெல்லாம் ஒப்பீடு செய்து பார்க்கும்போது, பழந்தமிழ் நிலப்பகுதியே ஆதித் தமிழரின் தாயகம் என்ற முடிவுக்கு நாம் வருவதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை. மேலும், ஆதி மூதாதை ஆதித் தமிழினத்தார் என்றே கூறவும் வேண்டும். தொடரும்....
(குறிப்பு: இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்துக் கருத்துகளும் யாம் படித்ததையொட்டியும், எந்தன் தேடலையொட்டியுமே அமைந்திருக்கிறது. பல மேற்கோள்களைக் கொண்டே செய்திகளை முன் வைத்துள்ளேன். இங்கு விடுப்பட்ட விடயங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி. )