தமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...

Posted by Justin Jeevaprakash | | Posted On Tuesday, May 25, 2010 at 7:34 PM

         காப்பியம் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கிய வகையாகும். இதில் ஒரு கதை மையாமாகவும் பலவகை பாக்களால் பாடப்பெற்று பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கும். தமிழில் பல காப்பியங்கள் உள்ளன. கதைச் சிறப்பாலும், சமயக் கருத்தை உணர்த்துவதிலும் இவை சிறப்புற்று இருக்கிறது என்றே காப்பியங்களைக் கூற வேண்டும்.
         தமிழில் உள்ள காப்பியங்களை ஐம்பெருங் காப்பியங்கள் என்றும், ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் கூறுவர். ஐம்பெரும் காப்பியங்கள் என்றால், சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தாமணி,   வளையாபதி, 
குண்டலகேசி         போன்றவை      அடங்கும். ஐஞ்சிறு காப்பியங்கள்,என்றால், சூளாமணி, நீலகேசி, நாககுமார காவியம், யசோதர காவியம்,  உதயணகுமாரா காவியம் ஆகும்.
          தமிழில் உள்ள காப்பியங்களில் மிகப் பழமையானது சிலப்பதிகாரமாகும். கோவலன், கண்ணகி, மாதவி ஆகிய மூவர் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவது சிலப்பதிகாரம். மேலும் சாதாரணக் குடிமகன் ஒருவனைத் தலைவனாக வைத்துப் பாடப்பெற்றதால், இதற்குப்  புரட்சி காப்பியம் என்றும் சிறப்புப் பெயர் உண்டு.
         சிலப்பதிகாரத்தோடு தொடர்புடையது மணிமேகளையாகும். இவை இரண்டும்  கதையாலும் காலத்தாலும் தொடர்புப்படுத்தப்பட்டிருப்பதால் இதனை இரட்டைக் காப்பியங்கள் என்றும் அழைப்பர். மணிமேகலையில் காப்பியத்தின் தலைவியாக மணிமேகளையும் இவள் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவளாக இருப்பாள். பௌத்த சமயத்தைப் பரப்புவதற்கே இக்காப்பியம் எழுதப்பட்டதாக சான்றுகள் கூறப்படுகின்றன.
        பிற்காலத்துல் சமண சமயத்தைப் பரப்புவதற்கே சீவகசிந்தாமணி என்ற காப்பியம் எழுந்தது. சைவ  சமயத்தின்  பெருமையை  விளக்கும்  வகையில்    பெரிய புராணம்,  கந்த புராணம், திருவிளையாடல் போன்ற 
காப்பியங்கள்  எழுந்தன.  வைணவ  சமயத்தின்  பெருமையைக்  கூறுவனவாகக்  கம்பராமாயணம்,  வில்லிபாரதம் போன்ற காப்பியங்கள் எழுந்திருப்பதாக சான்றுகள் பறைசாற்றுகின்றன.

Comments:

There are 3 comments for தமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...

Post a Comment