வணக்கம். கடந்த மாதம் சூன் 26 ல் பள்ளிக்கூட ரீதியில் 'புதிய பாதை' எனும் தமிழ் மொழி தாள் இரண்டிற்கான பயிற்சி புத்தகம் ஒன்றை வெளியீடு செய்தேன். இப்புத்தகம் மாணவர்களின் புரிதலுக்கு ஏற்பவும் அவர்களின் சிந்தனா சக்தியைத் தூண்டும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆசிரியரின் துணையின்றி தாமாகவே இயங்க முடியும் என்ற உணர்வைத் தூண்டக்கூடிய வண்ணம் இருக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு இப்புதிய பாதையை வடிவமைத்தேன்.

பெரும்பாலும் மாணவர்கள் தாங்கள் எழுதுகிற கட்டுரையையோ அல்லது வாக்கியம் அமைத்தலையோ சரியாகதான் செய்திருக்கிறோமா எனும் ஐயப்பாடுடன் தேர்வுகளைக் எழுதுகிறார்கள், இத்தகைய சூழல் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை இழக்கச் செய்வதோடு அவர்கள் அறிந்தே பிழை செய்ய வழிவகுத்துவிடுகிறது. இதனைப் போக்கவே மாணவர்கள் இப்புத்தகத்தில் அட்டவணை கருவியைப் பயன்படுத்தி வாக்கியம் அமைத்தலையும் வழிகாட்டி கட்டுரையையும் செய்கிறார்கள் .
இத்தகைய பயன்பாடு மாணவர்களுக்குக் கருத்துக்களைத் திரட்டி கொடுப்பதோடு, மனக்காட்சியையும் ஏற்படுத்துகிறது என்பதை எனது ஆய்வின் மூலம் என்னால் கண்டுணர முடிந்தது. இதுவே இப்புதிய பாதைக்கு வித்திட்டது என்றே கூற வேண்டும்.

இப்புத்தகம் முதலில் பள்ளிக்கூட ரீதியில் தலைமையாசிரியர் திருமதி.யௌவனாராணி அவர்களால் வெளியீடு காணப்பட்டது. இப்புத்தக வெளியீட்டிற்கான முழு செலவீனங்களையும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் எடுத்துக்கொண்டதனால் பள்ளியின் அனைத்து ஆறாமாண்டு மாணவர்களும் இலவசமாக இப்புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர். அதுமட்டுமின்றி கூலிம் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளின் ஒருமைப்பாட்டுக் கழகம் இப்புதிய பாதையைக் கூலிம் வட்டாரத்தில் அமைந்துள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் பயிற்சி நூலாக வழங்கியதோடு அங்கு அமைந்துள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளும் இதனை இப்போது வழிகாட்டியாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி.
.
வணக்கம். நல்ல முயற்சி. நற்பணிகள் தொடரட்டும். வாழ்துகிறேன்.
தங்களின் வலைப்பதிவைத் திருமன்றில் திரட்டியில் இணைத்துள்ளேன். பார்க்கவும்.
http://thirumandril.blogspot.com/
நல்ல பதிவுகளைத் தொடர்ந்து தருக.
இனிய தமிழை இணையத்தில் இணைந்து வளர்ப்போம்.
நல்ல முயற்சி. பாராட்டுக்கள். இளம் ஆசிரியர்களுக்கு நல்ல முன்மாதிரி நீங்கள். தமிழ்ப்பள்ளிக்கும் தமிழ்க்கல்விக்கும் தங்கள் நற்பணி தொடரட்டும்.
ஐயா திரு.மு.மதிவாணன் அவர்களே, உங்களின் பகிர்வுக்கும் வாழ்த்துக்கும் நன்றி....
வணக்கம் ஐயா திரு.சுப.நற்குணன் அவர்களே, என் பதிவைத் திருமன்றில் இணைத்ததற்கும் உங்களின் ஆதரவுக்கும் மிக்க நன்றி...
நல்லதொரு எடுத்துக்காட்டு. வாழ்க உங்கள் பணி
வளர்க நமது தமிழ்ப்பள்ளிகள்
நல்ல முயற்சி....வாழ்த்துகள்