சகதி…

Posted by Justin Jeevaprakash | | Posted On Monday, September 27, 2010 at 8:55 AM

.
அசைவோடு

அசைந்தாடி…

மென்காற்றோடு உறவாடி..

பிறந்து பிரிந்ததோ..

நேர்மின்மமுமாய்…

எதிர்மின்மமுமாய்…



இயற்கைக்கு

இயல் கொடுத்து

அசைவுக்கு

இசைக்கொடுத்து

சேர்ந்ததோ..

அணு ரூபமாய்..



தடம் தேட அணுரூபம்,

காற்றோடும்...

தீயோடும்…

நீரோடும்…

நிலத்தோடும்…

வானோடும்..

பரிணாமித்ததோ

பஞ்ச பூதமாய்…



இதையறிந்தும்

அறியாததுமாய்..

அறியாததை

அறிந்ததுமாய்…

மானிடன் மாயை

எனும் வலைக்குள்

பின்னியதும் ஏணோ…

(கடந்த அநங்கம் இதழில்
வெளியிடப்பட்ட என் கவிதை)
.

Comments:

There are 1 comments for சகதி…

Post a Comment