கணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 1 (02.10.2011)
Posted by Justin Jeevaprakash | | Posted On Sunday, October 2, 2011 at 7:10 PM

நிகழ்வின் முதல் நாளான இன்று, பள்ளியில் கவிதை புனைதலும், கபடி போட்டியும் நடந்தேறியது. பள்ளி மாணவர்கள் இவ்விரண்டு போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இப்போட்டியினைத் தொடர்ந்து,
ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டு
மாணவர்களுக்கென கபடிப் போட்டி
நடைபெற்றது.
இவ்விளையாட்டினை மாணவர்கள்
ஏற்கனவே விளையாடியிருந்தாலும், இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதனை மாணவர்கள் அறிந்து முறையே விளையாட வேண்டும் என்பதே எங்களின் முதல் நோக்கமாக இருந்தது. கபடி விளையாட்டின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு முறையே தெளிவுப்படுத்தப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்கள் கொடுத்த விதிமுறைகளுக்கொப்ப விளையாடினர். காற்பந்து விளையாட்டின் மேலுள்ள மோகத்தைக் காட்டிலும் கபடி விளையாட்டின் மேல் அதிகமாகவே மாணவர்களுக்கு மோகம் எற்பட்டதை என்னால் உணர முடிந்தது. இவ்விரண்டு போட்டிகளுடன் கோ.சாரங்கபாணியின் வாரத்தின் முதல் நாள் ஒரு நிறைவை நாடியது. போட்டிகளில் வெர்றிப் பெற்ற மாணவர்களுக்கு, போட்டிகளின் இறுதி நாளன்று நடைபெறவிருக்கும், பரிசளிப்பு விழாவில் வெற்றிக் கேடயங்கள் வழங்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
தொடரும்......
Post a Comment