இனியும் எங்களை எரிக்காதீர்.......
Posted by Justin Jeevaprakash | | Posted On Sunday, July 4, 2010 at 8:24 PM
விடிய மறந்தானோ ஆதவன்…..
திசை மறந்தானோ ஆண்டவன்…..?
கருகிய தமிழனின் தேகம் கண்டு
கருக மறந்ததோ மேகக்கூண்டு….?
மழையே பொழிந்திடு
எம்மண்ணில் தீயின் தாகத்தை தீர்த்திடு…..!
எம் மக்களின் வற்றாத குலக்கண்கள்...
தினந்தோறும்…
ஒரு தேசத்தின் துயர்துடைத்து
துயர் வாங்கும் கொடுமைகளை
பண்டமாற்றமாய் ஆக்கியதே.....!
அராஜ அசுர அரசியலே…
குண்டு மழை குளியளில்
தமிழனின் நிறத்தை உரசிப்பார்க்காதீர்…!
கருகினாலும் நாங்கள் நாங்களே….
எங்கள் உடன் பிற்ப்புக்களின்
இரத்த வெள்ளக் குளியலில்
நீச்சல் போட்டி ஆடுகிறார்களே
உலகத்தலைவர்கள்…..!
-தமிழினியன்
இத்துயரத்தைத் தடுக்க வக்கில்லாதவன், நான் அரசியல்வாதி நான் ஆன்மீகவாதி என்று கூறிக்கொண்டு இம்மாய உலகில் தலைவிரித்து ஆடிக்கொண்டுதான் இருக்கிறான்....!
அரசியல்வாதியையும் ஆன்மீகவாதியையும் உருவாக்கியது; உருவாக்கிக்கொண்டிருப்பது; உருவாக்கப்போவது, நம் மதிகெட்ட தமிழனே....!
வருத்தம் மனதை கேள்வி கேட்கிறது....
உண்மைத்தான் ஐயா அவர்களே... அரசியல் என்பது சாக்கடை என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்... அந்த சாக்கடையை உருவாக்கியது நாம்தான்! நாற்றம் வீசுகிறது குப்பைகள் நிரம்பியிருப்பதால்... ஆனால் அதை சுத்தம் செய்யக்கூடிய உரிமை நம்மிடையே உள்ளது....! சில நேரங்களில் அதை சுத்தம் செய்யவருபவனையும் பணம் விலைப்பேசி விடுகிறது! அதுமட்டுமா, நாற்றம் தாங்கவியலாமல் சிலர் ஓடியும் விடுகிறார்கள்! இப்படியே விட்டால் நாளைய நம் இனத்தின் அவலம்???? ஏதோ ஒரு தேரு முனையில் முகவரித்தெரியா வாழ்வதுதான்...