கூலிம் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையில் நடைபெற்ற 'கலைத்திறன் போட்டி'

Posted by Justin Jeevaprakash | | Posted On Thursday, June 10, 2010 at 5:01 PM

            வணக்கம். கடந்த ஜூன் 6 ஆம் தேதி, கூலிம் பண்டார் பாருவின் தமிழ்ப்பள்ளிகளின் ஒருமைப்பாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட ரீதியில் கலைத்திறன் போட்டி சிறப்பாக நடைபெற்றது.இதில் மாவட்டதிதின் கீழ்  அமைந்துள்ள   17         தமிழ்ப்பள்ளிகளும்       பங்கெடுத்தன.                  மாணவர்கள்  பேச்சுப் போட்டி, கட்டுரை எழுதும் போட்டி, திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டி,  கவிதை புனையும் போட்டி,  கதைச் சொல்லும் போட்டி, கணினிப் போட்டி, நாட்டியப் போட்டி எனும்  பல  நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வு  கூலிம்  தமிழ்ப்பள்ளியில்           காலை 9.00 மணியளவில்  ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.  இப்போட்டியை மாநில கல்வி  இலாக்காவின்  மொழிப்பிரிவு துணை இயக்குனர்  திரு. தமிழ்ச் செல்வன்  அவர்கள்  துவக்கி  வைத்து       உரையாற்றினார்.  மாணவர்களின்   கலைத்         தன்மையை     மேலோங்கச்                   செய்வதற்கு       
இவ்விழா ஒரு நல்ல சந்தர்ப்பமாகச் அமந்தது என்றே கூற வேண்டும். மாணவர்கள்  ஆர்வமுடன் தங்களின்
திறமைகளை         வெளிப்படுத்தினர். 
அனைத்து நிகழ்வுகளும்         சரியாக 
மதியம் 2.00    மணியளவில்             முடிவுற்றது. இந்நிகழ்வை முடித்து வைக்க கெடா 
மாநில                   தமிழ்ப்பள்ளிகளின்    
அமைப்பாளர்திரு.இராமகிருஷ்னண்
அவர்கள் வருகைப்புரிந்திருந்தார்.
கணேசர் தமிழ்ப்பள்ளியில் முதன்  முறையாக  அதிகமான பரிசு கோப்பைகளை            மாணவர்கள்                தட்டிச்   சென்றது,   அனைத்துத் தரப்பினருக்கும்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இடம்: திரு.தேவராஜன் நடு: திரு.இராமகிருஷ்ணன் வலம்: நான்
பரிசுப்பெற்ற கணேசர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்.

மாணவர்களிடம் இருக்கின்ற கலைத்திறனை இம்மாதிரியான போட்டிகளில் மட்டுமே வெளிப்படுத்த  முடிகிறது.  ஆகவே, ஆசிரியர்களும்  பெற்றோர்களும்    குழந்தைகளிடம் மறைந்திருக்கின்ற      கலைத்தன்மையை
 வெளிபடுத்த தயாராகஇருத்தல் வேண்டும். ஒவ்வொரு   குழந்தைகளுக்கும்   ஒவ்வொரு வகையிலான  கலைத்தன்மை மறைந்திருக்கிறது. அதுவே அவர்களின் ஆற்றலுக்கான விதை. அதை அவர்களிடமிருந்து வெளிக்கொணர்ந்தால் அவர்கள் உள ரீதியிலும் உடல் ரீதியிலும் வலிமைப் பெற்றவர்களாகத் திகழ்வர். அது மட்டுமின்றி  அழிந்து  கொண்டு  வருகிற நம் கலை, பண்பாடு, கலாச்சாரத்தையும் வளுப்படுத்துவதற்கு இம்மாதிரியான நிகழ்வுகளே முக்கியப் பங்காற்றுகின்றன. ஆகவே நாம் நமது கலை, பண்பாடு, கலாச்சரத்தை அழித்தது போதும்! இனிமேலாவது நம் எதிர்கால சங்கதியினரிடம் அதனை வாழ வைப்போம்....! நன்றி.


Comments:

There are 2 comments for கூலிம் மாவட்டத் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையில் நடைபெற்ற 'கலைத்திறன் போட்டி'

Post a Comment