சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சிறிலங்கா ஆடும் நாடகம் இறுதியில் கண்ணீரிலேயே முடியும்: ஆஸ்திரேலிய இராஜதந்திரி

Posted by Justin Jeevaprakash | | Posted On Saturday, June 12, 2010 at 2:08 AM

வணக்கம். சீனாவுக்கு இந்தியாவுக்கும் இடையில் சிறிலங்கா ஆடும் நாடகம் இறுதியில் கண்ணீரிலேயே முடியும்: ஆஸ்திரேலிய இராஜதந்திரி
சீனா,இந்தியா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் நட்பு இறுதியில் கண்ணீரில்தான் முடியும். புத்திசாலித்தனமாகச் செயற்படமுடியும் என்று இலங்கை நினைக்கிறது. இது மாபெரும் தவறாகும். ஆனால் இது பிழையான நினைப்பு. இலங்கை அதன் சுயாட்சியை இழக்க நேரும். இந்தியாவுக்கு தலையையும், சீனாவுக்கு வாலையும் காட்டும் இச்செயற்பாடு மிகவும் முட்டாள்தனமானது. இந்தியாவை மீறி
சீனாவுடன் நட்பைப்பேணுவது ஆபத்தானது. இவ்வாறு அவுஸ்திரேலியாவின் பிரபல முன்னாள் இராஜதந்திரிகளில் ஒருவரும்,
இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் துணை உயர்ஸ்தானிகராக 1994 ஆம் ஆண்டு கடமையாற்றியவருமான புரூஸ் ஹெய் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நடப்பு விவகாரங்கள் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அதில் அவர் முக்கியமாகத்
தெரிவித்துள்ளவை வருமாறு, இலங்கைத் தூதரகங்கள் அரசியல் மயப்பட்டுவிட்டன. அவை புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான நிகழ்ச்சி நிரல்களை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. தமிழர்களுக்கு தொல்லை கொடுக்கின்றன. இலங்கைத் தூதரகங்கள் அமைந்திருக்கும்
அந்தந்த நாடுகளின் இணக்கத்துடன் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது நிலைமை மாறுகிறது. ஏனெனில் அந்நாடுகள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டன.
ஐ.நாவின் சர்வதேச குற்ற விசாரணைகளுக்கு இடம்கொடுக்காமல் இருப்பதன் மூலம் இலங்கையின் பெயர் கெடுகிறது. இலங்கையே அதன் பெயரை கெடுக்கிறது. இலங்கையின் யுத்தக் குற்றங்கள் உள்நாட்டு விடயங்கள் அல்ல.யுத்தக் கைதிகளை படுகொலை செய்தல். அப்பாவி பொதுமக்களை கொலைசெய்தல், பெண்களை கற்பழித்தல் என்பன எப்படி உள்நாட்டு விடயங்கள் ஆகி விடமுடியும். இலங்கைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் கிடைக்கப்பெற்றது உண்மையான வெற்றி
அல்ல. ஏனெனில் சிவில் யுத்தத்தின் மூலப் பிரச் சினைகண்டறிந்து
தீர்க்கப்படவில்லை. தமிழ் அரசியல் கட்சிகளுடன் அர்ப்பணிப்பு, பற்றுறுதி,
விசுவாசம், நம்பிக்கை, புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில்
பேச்சுக்களை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். ஆனால் அரசுத் தரப்பில் இவை ஒன்றையும் காண முடியாமல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நன்றி:

தந்தை பெரியார் மடற்குழு.

Comments:

There are 0 comments for சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சிறிலங்கா ஆடும் நாடகம் இறுதியில் கண்ணீரிலேயே முடியும்: ஆஸ்திரேலிய இராஜதந்திரி

Post a Comment